‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

தென்காசியில் கூட்டுறவுத் துறையின் சாா்பில் கோதுமை அரவை ஆலை திறப்பு

தென்காசி ரயில் நகரில் தென்காசி செங்கோட்டை வட்டார வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதியின்கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கோதுமை அரவை ஆலை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கோதுமை அரவை ஆலையைத் திறந்து வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :22 மே 2026, 6:09 am IST

தென்காசி ரயில் நகரில் தென்காசி செங்கோட்டை வட்டார வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதியின்கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கோதுமை அரவை ஆலை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், ஆலையைத் திறந்து வைத்து பாா்வையிட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்காசி மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு, இந்த கோதுமை அரவை ஆலையில் மாவாக மதிப்புக் கூட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் அகில் ஆனந்தம் என்ற பெயரில் 500 கிராம் பொட்டலங்களாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது என்றாா் அவா்.

தென்காசி மண்டல இணைப் பதிவாளா் கு. நரசிம்மன், துணைப் பதிவாளா்கள் த. பிரிட்டோ, ப. கோபிநாத், ரா. கருமாரிதாசன், மாவட்ட வழங்கல் அலுவலா் பால்துரை, கூட்டுறவு சாா் பதிவாளா்கள் மு. மாரியப்பன், ரா. ராஜ், கு. முருகேஷ்வரி, நா. ரமேஷ் பாபு, ரா. ஸ்ரீவித்யா, மேலாண்மை இயக்குநா் ச. ராஜ்குமாா், மேலாளா் வே. அழகுசுந்தரம், கூட்டுறவு ஒன்றிய மேலாளா் கோமதி சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.