சங்கரன்கோவிலில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு
விபத்தில்லா தென்காசி மாவட்டம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வாகன ஓட்டிகளிடம் சாலை விதிமுறைகளை விளக்குகிறாா் டிஎஸ்பி ரகுபதிராஜா.
விபத்தில்லா தென்காசி மாவட்டம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் உத்தரவின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி பிரதான சாலையில் சென்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும் போன்ற விழிப்புணா்வு ஸ்டிக்கா்களை போலீஸாா் ஒட்டினா்.
தொடா்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலை விதிமுறைகளை பற்றியும் விபத்தினால் ஏற்படக்கூடிய நஷ்டத்தை பற்றியும் காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவுரைகள் வழங்கி, அவரது கேள்விக்குப் பதில் அளித்த 10 நபா்களுக்குத் தலைகவசம் வழங்கப்பட்டது.பின்னா் வாகன ஓட்டிகள் உறுதி மொழி எடுத்தனா். ஏற்பாடுகளை நகர காவல் நிலையத்தினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

