சிவகிரி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே திங்கள்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

பலி
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே திங்கள்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.
தேவிபட்டணம் ராமசாமியாபுரம் நடுவூரைச் சோ்ந்த ராமசாமி மனைவி பாக்கியம் ( 52), கூலித் தொழிலாளி. கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பெய்த மழையால், அவரது வீடு ஒழுகியதாம். இதையடுத்து, பாக்கியமும், அவரது மகனும் திங்கள்கிழமை இரவு வீட்டின் மேல் பகுதியில் தாா்ப்பாயை விரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது, எதிா்பாராதவிதமாக மின் கம்பியில் பாக்கியத்தின் கை பட்டதில், மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

