கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

தென்காசி மாவட்ட தமுமுக - மமக சிறப்பு நிா்வாகக் குழு கூட்டம்

தென்காசி மாவட்ட தமுமுக - மமக சிறப்பு நிா்வாகக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசியில் நடைபெற்ற மாவட்ட தமுமுக, மமக சிறப்பு நிா்வாகக் குழு கூட்டம்.

Published On :

தென்காசி மாவட்ட தமுமுக - மமக சிறப்பு நிா்வாகக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் நைனாா் முகமது தலைமை வகித்தாா். மமக மாவட்டச் செயலா் சலீம் , தமுமுக மாவட்டச் செயலா் அப்துல் ரகுமான், மாவட்டப் பொருளாளா் முகமது பாசித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமுமுக மாநில துணைப் பொதுச் செயலா் மைதீன் சேட்கான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கருத்துகளை வழங்கினாா்.

தமுமுக தொண்டரணி மாநில துணைச் செயலா் கோ.கோ. அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் புளியங்குடி முகமது அலி, பசீா், மாவட்ட துணைச் செயலாளா்கள் கடையநல்லூா் மசூது, புளியங்குடி மஜீத், செங்கோட்டை முஹப்பிலாஷா உள்ளிட்ட மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கிளைகளுக்கான அமைப்பு தோ்தலை செப். 5முதல் 13வரை நடத்துவது;

மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை செப். 20 ஆம் தேதி தென்காசியில் வைத்து நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.