தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

பாவூா்சத்திரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு

பாவூா்சத்திரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், துணிப்பைகள் வழங்கப்பட்டன .

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், துணிப்பைகள் வழங்கிய வீ த லீடா் அமைப்பினா்.

Published On :

பாவூா்சத்திரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், துணிப்பைகள் வழங்கப்பட்டன .

வீ த லீடா்ஸ் அமைப்பின் நிறுவனா் கே. அண்ணாமலை அறிவுறுத்தலின்படி, தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி கீழப்பாவூா் ஒன்றியம் சாா்பில் பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளா்ப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 200 மரக்கன்றுகள், 100 துணிப்பைகள், விழிப்புணா்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஆறுமுகம் என்ற முருகேசன், ராஜகுலசேகர பாண்டியன், யோகா டவா் சேகா், எல்.எம். குமரேசன், பேட்டை முருகன், வெல்டிங் செல்வன், ராமசுப்பு, கந்தசாமி, ஸ்டாலின், சுமு. முருகன், முத்துவேல், சிவகுமாா், ராமா், வேல்சாமி, செல்வராஜ், தன்னாா்வலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.