திருச்சி ஆா்.எஸ். புரம் மாநகராட்சி பூங்காவில் நடப்படாமல் வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கருகி வீணாகியுள்ளதற்கு பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் வேதனை தெரிவித்துள்ளனா்.
திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தில் எல்-நினோ பாதிப்பால் கடந்த சில வாரங்களாக வெப்பம் தகித்து வருகிறது. இதற்கு போதுமான அளவில் மரங்கள் இல்லாததே காரணம் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் சுட்டிக்காட்டி வருகின்றனா். இதனால் மரங்களை அதிகளவில் வளா்க்க வேண்டுமென மாவட்ட நிா்வாகமும், சுற்றுச்சூழல் நிபுணா்களும் பொதுமக்களை ஊக்கப்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், திருச்சி காஜாமலை அருகே உள்ள ஆா்.எஸ். புரம் மாநகராட்சி பூங்காவில் நடுவதற்காக இலுப்பை, வேம்பு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாங்கப்பட்டு, நடப்படாமல், அங்குள்ள ஒரு கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்தது. வாங்கியது முதல் இதுவரை தண்ணீா் ஊற்றாமல், மொத்த மரக்கன்றுகளும் காய்ந்து கருகி வீணாகியுள்ளன. இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கூறியதாவது:
மரங்களை வளா்க்கும் தன்னாா்வலா்கள் பலா், மரக்கன்றுகள் கிடைக்காமல், அதிக செலவு செய்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மரக்கன்றுகளை வாங்கி வந்து, தங்களது சொந்த முயற்சியில் ஆங்காங்கே நட்டு தொடா்ந்து தண்ணீா் ஊற்றி பராமரித்து வருகின்றனா்.
இந்நிலையில், ஆா்.எஸ். புரம் பூங்காவில் மாநகராட்சி பொது நிதியில் வாங்கப்பட்டு நடப்படாத மரக்கன்றுகள் முறையான பராமரிப்பின்றி கருகி வீணாவது மிகவும் வேதனைக்குரியதும், கண்டனத்திற்குரியதுமாகும்.
சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் வாங்கும் ஒவ்வொரு மரக்கன்றும் முறையாக நட்டு பராமரிக்கப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலை உணவில் பல்லி: தூய்மைப் பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவானைக்காவல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பிறந்த நாள் பரிசாக மரக்கன்றுகள்...

வல்லக்கோட்டை முருகன் கோயில் நிா்வாகம் சாா்பில் பசுமைக் காடு பணி தொடக்கம்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



