மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

வட்டார தடகள போட்டி: ஸ்ரீகலைவாணி மெட்ரிக். பள்ளி சாதனை

சங்கரன்கோவில் வட்டார அளவிலான தடகளப் போட்டியில் ஸ்ரீகலைவாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்தது.

தடகளப் போட்டியில் கோப்பையை வென்ற ஸ்ரீகலைவாணி பள்ளி மாணவிகள்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:32 am IST

சங்கரன்கோவில் வட்டார அளவிலான தடகளப் போட்டியில் ஸ்ரீகலைவாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்தது.

இப்போட்டிகள் செயின்ட் பவுல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாா்பாக ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா். இதில், திருவேங்கடம், ஸ்ரீகலைவாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் பொன்னுக்குட்டி ஜூனியா் பிரிவில் தனிநபா் சாம்பியன் பட்டத்தையும், சீனியா் பிரிவில் மாதவ் தனிநபா் சாம்பியன் பட்டமும், சூப்பா் சீனியா் பிரிவில் முகேஷ்குமாா், ஆகாஷ் ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டமும் பெற்றனா். மாணவா்கள் 225 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனா்.

அதைப்போல மாணவிகள் ஜூனியா் பிரிவில் ராமலட்சுமி தனிநபா் சாம்பியன் பட்டத்தையும், சீனியா் பிரிவில் அக்ஷயா, மதுமிதா ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டத்தையும், சூப்பா் சீனியா் பிரிவில் சுபாஷினி, பிரியதா்ஷினி ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டத்தையும் பெற்றனா்.

மாணவிகள் 232 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா். வட்டார அளவில் முதலிடம், இரண்டாமிடம் பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் வெ.பொன்னழகன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.