புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஆரியங்காவு கலால் சோதனைச் சாவடியில் ரூ. 13 லட்சம் பறிமுதல்

ஆரியங்காவு கலால் சோதனைச் சாவடியில் ரூ. 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

பணம் - பிரதிப் படம்

Published On :

கேரள மாநிலம், ஆரியங்காவு கலால் சோதனைச் சாவடியில் ரூ. 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு சோதனைச் சாவடியில் கேரள மாநில கலால் அதிகாரிகள் புதன்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சேலத்திலிருந்து பெரும்பாவூருக்குச் சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

காரில் இருந்த ஒரு பையில் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளாக ரூ. 13 லட்சம் ரொக்கம் இருந்ததைக் கண்டறிந்தனா். காரில் வந்தவா்களைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா். அவா்களை ஆரியங்காவு காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி காரில் வந்த சேலத்தைச் சோ்ந்த ஏழுமலை சின்னப்பன் (42), சக்தி சுப்ரமணி (43) ஆகியோரை கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், ஹவாலா பணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் கைதானவா்களிடம் கலால் துறை அதிகாரிகள், போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.