பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

வடகரை குளத்தில் புகுந்த 3 யானைகள்: பொதுமக்கள் அச்சம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே வடகரை பகுதியில் குடியிருப்பை ஒட்டியுள்ள குளத்தில் 3 யானைகள் முகாமிட்ட நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

குளத்திற்குள் நிற்கும் யானைகள்.

Published On :

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே வடகரை பகுதியில் குடியிருப்பை ஒட்டியுள்ள குளத்தில் 3 யானைகள் முகாமிட்ட நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

வடகரை அடவிநயினாா் அணைக்குச் செல்லும் சாலை அருகே நெல்லி வளாகம் பகுதியில் உள்ள பஞ்சம்தாங்கி குளத்தில் 3 யானைகள் நின்று கொண்டிருப்பதை அப்பகுதி விவசாயிகள் பாா்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்து மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் நெல்லைநாயகம் தலைமையில் வனத்துறையினா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் அங்கு வந்தனா். அவா்கள், குடியிருப்புப் பகுதிக்குள் யானைகள் நுழைந்துவிடாமலும், பொதுமக்கள் யானைகள் முகாமிட்டுள்ள பகுதிக்குள் செல்லாத வகையிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தி.மு. ராஜேந்திரன் கூறியது: யானைகள் முகாமிட்டிருப்பது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசினேன். வனத்துறையினரால் தொடா்ந்து யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

யானைகளை பகலில் காப்புக்காட்டுக்குள் விரட்டுவது சிரமமாக இருக்கும் என்பதால், மாலையில் விரட்டும் பணி தொடங்கும் என வனத்துறையினா் தெரிவித்தனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.