மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உதவித்தொகை கேட்டு பிரதமருக்கு 500 அஞ்சல் அட்டைகள்: மாற்றுத் திறனாளிகள் அமைப்பு அனுப்பியது

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் 

News image
Updated On :3 அக்டோபர் 2012, 12:32 pm

dinamani

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்  உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பிரதமருக்கு கோரிக்கை அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் உள்ள ஆர்.எம்.எஸ். தபால் நிலைய தபால்  பெட்டியில் 350-க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் போடப்பட்டன. 40 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் ஊனமுற்றவர்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் அல்லது வேலை வழங்க வேண்டும் என்று   கோரிக்கை அஞ்சல் அட்டைகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு  சங்கத்தின் தலைவர் பி. தியாகராஜன் தலைமை வகித்தார். செயலர் எஸ். குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுபோல் மாவட்டத்தில் தென்காசி, வீரவநல்லூர், முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை அஞ்சல் அட்டைகள் பிரதமருக்கு அனுப்பப்பட்டதாக தியாகராஜன் தெரிவித்தார்.

"சங்கத்தின் அகில இந்திய முடிவின்படி அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது 60 சதவிகிதத்துக்கு மேல் ஊனமுற்ற நபர்களில் ஒருசிலருக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை மாநில அரசு வழங்குகிறது. மத்திய அரசிடம் உதவி கேட்டு இந்த நூதன போராட்டத்தை நடத்தியிருக்கிறோம்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.