காவல் ஆணையர் அலுவலகத்தை தமிழ் புலிகள் அமைப்பினர் முற்றுகை
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை


திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை தமிழ் புலிகள் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி அருகேயுள்ள மானூரைச் சேர்ந்த ராஜ்குமார், தமிழ்வேந்தன் ஆகிய இரு இளைஞர்களையும் பாளையங்கோட்டை போலீஸôர் திங்கள்கிழமை இரவு கைது செய்து சென்றனராம்.
எந்தவித காரணத்தையும் கூறாமல், வலுக்கட்டாயமாக கைது செய்து சென்றதாகவும், போலீஸôர் அவர்களை கடுமையாகத் தாக்கியதாகவும் கூறி, தமிழ் புலிகள் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை மாலை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.
அந்த அமைப்பின் மாநகர் மாவட்ட மாணவரணி செயலர் மு. இளமாறன், சட்டக் கல்லூரி மாணவர் தனிஅரசு ஆகியோர் தலைமையில் சுமார் 25 இளைஞர்கள் காவல் ஆணையர் அலுவலக வாசல் முன்பு தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆணையர் அலுவலக நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் அருள் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆய்வாளர் அருள் உறுதியளித்தார். இதையடுத்து இளைஞர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...