தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு!தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.5.74 லட்சம் நல உதவிகள்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.5.74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மு.கருணாகரன் வழங்கினார்.

Updated On :

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.5.74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மு.கருணாகரன் வழங்கினார்.

ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்கள் அனைத்தையும் அந்தந்த துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து குறிப்பிட்ட காலத்துக்குள் பரிசீலித்து பதிலளிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வன்கொடுமை தடுப்புச் சட்ட நிவாரணமாக 2 பயனாளிளுக்கு தலா ரூ.2.81 லட்சம், பிற்பட்டோர் நலத் துறை மூலம் 6 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம், பாளையங்கோட்டை வட்டம் முத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 47 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.க. குழந்தைவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நிர்மலா, பிற்பட்டோர் நல அலுவலர் சம்பத், மாவட்ட வழங்கல் அலுவலர் சேகர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.