சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

தேர்வு விடுமுறையில் நீச்சல் பயிற்சி முகாம்

காலாண்டுத் தேர்வு விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

Updated On :

காலாண்டுத் தேர்வு விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் பா. பிராங்க்பால் ஜெயசீலன் கூறியதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், திருநெல்வேலி பிரிவு சார்பில் நீச்சல் கற்றுக் கொள் எனும் திட்டத்தின்படி, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் ஆண்டு முழுவதும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. என்ஐஎஸ் பட்டம் பெற்ற பயிற்சியாளரால் 12 மணிநேரத்தில் நன்றாக நீந்தும் அளவுக்கு அனைத்து வயதினருக்கும் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. காலாண்டுத் தேர்வு விடுமுறையை முன்னிட்டு சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். 12 நாள்களில் தினமும் 1 மணி நேர பயிற்சி வீதம் 12 மணி நேரப் பயிற்சியில் நன்றாக நீந்தும் அளவுக்கு பயிற்சி வழங்கப்பட்டு நிறைவு நாளில் பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அரசு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த பயிற்சியானது நாள்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும்.

பெண்களுக்கு பெண் பயிற்சியாளரால் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 94866-30403 என்ற செல்லிடப்பேசி எண்ணில் நீச்சல் பயிற்றுநர் பிரேம்குமாரை தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.