நெல்லை கம்பன் கழகத்தின் 412 ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். வெ.குமரகுருபரன் இறைவணக்கம் பாடினார். மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா வரவேற்றார். செம்மை சேர் நாமம் என்ற தலைப்பில் அமைப்பின் செயலர் கவிஞர் பொன்.வேலுமயிலும், எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் என்ற தலைப்பில் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தியும் சொற்பொழிவாற்றினர். நிகழ்ச்சியில் பரகாலசுவாமி, மாடசாமி, பேராசிரியர் காந்திமதிநாதன், சங்கரன், தங்கராஜ், சுப்பிரமணியன், வெள்ளைத்துரை, முருகன், ராமநாதன், ராமகிருஷ்ணன், வெங்கடாசலபதி, கோபாலன், சக்திவேல், கோமதி, பிரேமா, தங்கம், லட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.