அனுமதியின்றி நடைப்பயண முயற்சி: 62 பேர் கைது
கந்துவட்டி கொடுமைக்கு எதிராக தென்காசியிலிருந்து திருநெல்வேலி வரை நடைப்பயணம் மேற்கொள்ள முயற்சித்த 62பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.


கந்துவட்டி கொடுமைக்கு எதிராக தென்காசியிலிருந்து திருநெல்வேலி வரை நடைப்பயணம் மேற்கொள்ள முயற்சித்த 62பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தமிழக அரசு கந்து வட்டி சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏழை, எளிய விவசாயிகள்,தொழிலாளர்களுக்கு சிறுகுறு கடன் நிபந்தனையின்றி வழங்க வேண்டும்,பொதுத்துறை வங்கிகளும் கூடுதலாக சிறுகடன் நிபந்தனையின்றி வழங்க வேண்டும், சிறு,குறு நடுத்தர விவசாயிகள் கடன்களை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியிலிருந்து திருநெல்வேலி வரை நடைப்பயணம் மேற்கொள்ளப்போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,அகிலஇந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்,மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. தென்காசி புதிய பேரூந்துநிலையம் முன்பிருந்து தொடங்கிய இந்த நடைப்பயணத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் பெ.சண்முகம் தொடங்கிவைத்துப் பேசினார்.
இதில், விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் பாஸ்கரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலதுணைச் செயலர் விஜயமுருகன்,பொருளாளர் பெருமாள்,விவசாய சங்க மாவட்டச் செயலர் வேலுமயில், மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன், மாதர்சங்க மாவட்டச் செயலர் கற்பகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மேனகா,செயலர் ராஜகுரு,பால்சாமி ஆகியோர் பேசினர்.
இதையடுத்து நடைப்பயணம் மேற்கொள்ள முயற்சித்த 11பெண்கள் உள்ளிட்ட 62பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...