எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மின்னல் பாய்ந்து தொழிலாளி காயம்

முன்னீர்பள்ளம் அருகே புதன்கிழமை மின்னல் பாய்ந்து தொழிலாளி பலத்த காயமடைந்தார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:43 am

DIN

முன்னீர்பள்ளம் அருகே புதன்கிழமை மின்னல் பாய்ந்து தொழிலாளி பலத்த காயமடைந்தார்.
முன்னீர்பள்ளம் அருகேயுள்ள தருவை பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் ஈஸ்வரன் (40). கூலித்தொழிலாளியான இவர், அதே பகுதியில் புதன்கிழமை நின்று கொண்டிருந்தாராம். அப்போது இடியுடன் பலத்த மழை பெய்தபோது திடீரென மின்னல் பாய்ந்ததில் ஈஸ்வரன் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
தீக்காயமடைந்த பெண் சாவு: மானூர் அருகேயுள்ள வெங்கலப்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி கலையரசி (30). இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு நிகழ்ந்த தீ விபத்தில் காயமடைந்தார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மானூர் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.