11 வட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் 11 வட்டங்களில் வெள்ளிக்கிழமை ((நவ.17) )அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.


திருநெல்வேலி மாவட்டத்தில் 11 வட்டங்களில் வெள்ளிக்கிழமை ((நவ.17) )அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
அதன்படி, வட்டத்தில் துவராசி, சிவனியார்குளம், ராதாபுரம் வட்டத்தில் செளந்திரபாண்டியபுரம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் கோவிந்தபேரி, நான்குநேரி வட்டத்தில் உன்னங்குளம், சேரன்மகாதேவி வட்டத்தில் கொழுமடை, கேசவசமுத்திரம், பாளையங்கோட்டை வட்டத்தில் விஜயராகவ முதலியார் சத்திரம், மானூர் வட்டத்தில் மானூர், சங்கரன்கோவில் வட்டத்தில் குலசேகரமங்கலம், திருவேங்கடம் வட்டத்தில் பெருங்கோட்டூர், ஆலங்குளம் வட்டத்தில் மாறாந்தை, கடையநல்லூர் வட்டத்தில் மடத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (நவ.17) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், நிலத்தாவாக்கள், சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...