அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

15 வட்டங்களில் இன்று அம்மா திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (அக்.13) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 11:52 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (அக்.13) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களிலும் தலா ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்யப்பட்டு வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மூன்று கட்ட முகாம்கள் நடந்துள்ளன. 4ஆவது கட்ட முகாம்கள் தொடர்ந்து வாரந்தோறும் நடைபெறுகின்றன.
இதன்படி, திருநெல்வேலி வட்டத்தில் துலுக்கர்குலம், ராதாபுரம் வட்டத்தில் சமூகரெங்கபுரம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் கீழ்முகம், நான்குனேரி வட்டத்தில் விஜயநாராயணம், சேரன்மகாதேவி வட்டத்தில் ஓமநல்லூர், பிரான்சேரி, பாளையங்கோட்டையில் பற்பகுளம், மானூர் வட்டத்தில் செழியநல்லூர் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
சங்கரன்கோவிலில் தடியம்பட்டி, திருவேங்கடத்தில் உசிலங்குளம், வி.கே.புதூர் வட்டத்தில் வாடி, ஆலங்குளம் வட்டத்தில் குத்தப்பஞ்சான், கடையநல்லூர் வட்டத்தில் அச்சன்புதூர் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை முகாம் நடைபெறும்.
இந்த முகாம்களில், அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாலை மற்றும் குடிநீர் வசதி குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். தகுதியான மனுக்களுக்கு முகாம் இடத்திலேயே தீர்வு காணப்படும் என்றார் ஆட்சியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.