சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தருவை கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

தருவை எப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:46 am IST

தருவை எப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இக்கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் டிவிஎஸ், அவலான், மைக்ரோ சிஸ்டம், சோகோ, நோக்கியா உள்ளிட்ட 21 தனியார் நிறுவனங்களில் பணி செய்ய 221 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஸ்காட் கல்விக் குழும பொதுமேலாளர் இக்னேஷியஸ் சேவியர் தலைமை வகித்தார். கல்லூரி முதன்மை தொழில்நுட்ப அலுவலர் குப்புசாமி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் முதல்வர் அண்டனி வசந்தகுமார், துணை முதல்வர் ராஜ், நிர்வாக அதிகாரி எம். மைக்கேல் பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு அதிகாரி கோபி பிரபு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.