இலவச ஓவியப் பயிற்சி முகாம் நிறைவு
திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் வரைதல் குறித்த இலவச பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.


திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் வரைதல் குறித்த இலவச பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.
அரசு அருங்காட்சியகம் சார்பில் இம்முகாம் கடந்த 26ஆம் தேதி தொடங்கி 4 தினங்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து 80-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்து கொண்டு ஓவியங்கள் வரைந்தனர். மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை பயிற்சி நிறைவு விழா, பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 127 ஆவது பிறந்த தின விழா ஆகியன நடைபெற்றன. விழாவுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பே. ராஜேந்திரன் தலைமை வகித்தார். வரலாற்று ஆய்வாளர் செ. திவான், எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன், நல்லாசிரியர் சு. செல்லப்பா, அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரபுஷ்பம் ஆகியோர் பேசினர்.
இதையடுத்து, பாப்பாக்குடி கவிஞர் இரா. செல்வமணி, திருக்குறள் இரா. முருகன், மூக்குப்பேரி தேவதாசன், கோதை மாறன், பாப்பாக்குடி முருகன், தூத்துக்குடி மாரிமுத்து ஆகியோர் கவிதை வாசித்தனர். முன்னதாக, பாரதிதாசன் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி வரவேற்றார். ஓவிய ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...