நெல்லையில் சித்ரா பெளர்ணமி தீர்த்தவாரி

திருநெல்வேலியில் சித்ரா பெளர்ணமியையொட்டி, தாமிரவருணியில் தீர்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

திருநெல்வேலியில் சித்ரா பெளர்ணமியையொட்டி, தாமிரவருணியில் தீர்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் சார்பில் ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி சுவாமி-அம்மன், அஸ்திர தேவர், அஸ்திர தேவி, சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகள் மரச்சப்பரத்தில் கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் புறப்பட்டனர். சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, ஈரடுக்கு மேம்பாலம் வழியாக கைலாசபுரத்தை அடைந்து, அங்கு தாமிரவருணி ஆற்றின் கரையோரம் உள்ள தைப்பூச மண்டபத்தில்  அம்பாளுடன் எழுந்தருளினார். தீர்த்தவாரியும், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தீர்த்தவாரியில் பங்கேற்றனர்.
வசந்த உத்ஸவம் இன்று தொடக்கம்: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் வசந்த உத்ஸவம் திங்கள்கிழமை தொடங்குகிறது. இக்கோயிலில் வசந்த உத்ஸவம் திங்கள்கிழமை தொடங்கி வரும் மே 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் வசந்த மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு தினமும் காலையில் கும்பம் வைத்து ஹோமம், சிறப்பு அபிஷேகம்,  இரவில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெறும். மேலும், சுவாமி- அம்பாள் வசந்த மண்டபத்தின் உள்பிரகாரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com