/

நெல்லையில் மகளுடன்  இளம்பெண் மாயம்

திருநெல்வேலிக்கு மருத்துவமனைக்கு கணவருடன் வந்த இளம்பெண், மகளுடன் மாயமானார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:56 am

DIN

திருநெல்வேலிக்கு மருத்துவமனைக்கு கணவருடன் வந்த இளம்பெண், மகளுடன் மாயமானார்.
வீரவநல்லூரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (31). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஷில்பா (27). இவர்களது மகள் முத்துலட்சுமி (5). பார்வைக் குறைபாடு காரணமாக முத்துலட்சுமிக்கு சிகிச்சை பெறுவதற்காக, திருநெல்வேலியில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு குழந்தையுடன் இருவரும் வந்தனராம். சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதற்காக திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்துக்கு வந்தனர். பேருந்து நிலையத்தில் மனைவி, குழந்தையை விட்டுவிட்டு மாரியப்பன் கடைக்கு சென்றாராம். திரும்பி வந்து பார்த்தபோது இருவரையும் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்த  புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு பெண்: பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் நாகப்பன் மனைவி சூர்யா (24). கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இம்மாதம் 22 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சூர்யா வீடு திரும்பவில்லையாம்.
இது குறித்து பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.