காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

நாளை 15 வட்டங்களில் அம்மா திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில்  வெள்ளிக்கிழமை(ஆக.3) 15 வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 7:28 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில்  வெள்ளிக்கிழமை(ஆக.3) 15 வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  திருநெல்வேலி வட்டம் நாரணம்மாள்புரம், ராதாபுரம் வட்டம் வடக்கு வள்ளியூர், அம்பாசமுத்திரம் வட்டம் சிவசைலம், நான்குனேரி வட்டம் ஸ்ரீவரமங்கைபுரம், மருகால்குறிச்சி,  சேரன்மகாதேவி வட்டம் வடக்கு அரியநாயகிபுரம், பாளையங்கோட்டை வட்டம் மேலத்திருவேங்கடநாதபுரம், மானூர் வட்டம் கட்டாரங்குளம், சங்கரன்கோவில் வட்டம் வெள்ளப்பனேரி, திருவேங்கடம் வட்டம் தெற்கு குருவிகுளம், தென்காசி வட்டம் குத்துக்கல் வலசை, செங்கோட்டை வட்டம் செங்கோட்டை நகரம், வீரகேரளம்புதூர் வட்டம் வீரகேரளம்புதூர், ஆலங்குளம் வட்டம் பெத்தநாடார்பட்டி, சிவகிரி வட்டம் தென்மலை பகுதி, கடையநல்லூர் வட்டம் கனகசபாபதிபேரி ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித் தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.