தாழையூத்து மதுக்கடையில் திருட்டு
தாழையூத்தில் மதுக்கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
தாழையூத்தில் மதுக்கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
தாழையூத்து வ.உ.சி. நகரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும் பூட்டி சென்றனராம். சனிக்கிழமை வந்து பார்த்தபோது கடையின் சுவரில் துளையிட்டு, உள்ளே இருந்த 30 மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதுகுறித்து கடையின் விற்பனையாளர் குப்பக்குறிச்சியைச் சேர்ந்த முருகன் அளித்த புகாரின்பேரில் தாழையூத்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

