
விதிமீறல்: 115 நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை அபராதம்
சுதந்திர தினத்தன்று விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட 115 நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை அபராதம் விதித்துள்ளது.
சுதந்திர தினத்தன்று விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட 115 நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை அபராதம் விதித்துள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) அ.முகம்மது அப்துல்காதர் சுபைர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால் உத்தரவின்பேரில், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் பாலச்சந்திரன் ஆலோசனைப்படி, திருநெல்வேலி மண்டல தொழிலாளர் இணை ஆணையர் சி.ஹேமலதா வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அ.முகம்மது அப்துல்காதர் சுபைர் தலைமையில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சங்கரன்கோவில், தென்காசி, அம்பாசமுத்திரம், வள்ளியூர் ஆகிய பகுதிகளில் சுதந்திர தினத்தன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சிப்பந்திகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். மாறாக அன்றைய தினம் பணிபுரியும் சிப்பந்திகளுக்கு இரட்டிப்பு ஊதியமோ அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்போ வழங்க வேண்டும்.
விடுமுறை நாள்களில் பணிபுரியும் சிப்பந்திகளிடம் சட்டவிதிகளின்படி வரையறுக்கப்பட்ட படிவத்தில் கையெழுத்து பெற்று அதன் நகலை நிறுவனத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். மற்றொரு நகலை 24 நேரத்திற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளருக்கு அனுப்பியிருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் 115 நிறுவனங்கள் சிப்பந்திகளை பணியில் அமர்த்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





