திருநெல்வேலியில் மாநகர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாநகர் மாவட்ட தேமுதிக செயலர் ஏ.முகம்மதுஅலி தலைமை வகித்தார். பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைச் செயலர் பழனிக்குமார், சின்னத்துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், "தேமுதிக நிறுவனர் தலைவர் நடிகர் விஜயகாந்த் பிறந்த நாளில் கோயில்கள், தேவாலயம், மசூதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது; கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, துணிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை சேகரித்து வழங்குவது; பேட்டையில் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் சேதமாகி கிடக்கும் சாலையை விரைவில் சீரமைக்கவும், மானூர் குளத்திற்கு தாமிரவருணி தண்ணீரைத் திருப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேலப்பாளையம் நத்தம் சாலையில் பாளையங்கால்வாய் தற்காலிக பாலத்தை தரமாக அமைக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பகுதிச் செயலர் ஜலில் ரகுமான், ஆரோக்கிய அந்தோணி, மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், நிர்வாகிகள் ரஹீம், காமராஜ், கொம்பையா பாண்டியன், சிவா, முருகன், சின்னத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









