சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

அரசு அருங்காட்சியகத்தில் இன்று  பெண்களுக்கு கைவினைப் பயிற்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கு கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை (ஆக. 30) நடைபெறுகிறது.

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கு கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை (ஆக. 30) நடைபெறுகிறது.
இதுகுறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வாரம் ஒருநாள் பெண்களுக்கு கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2019இல் ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் காகிதப் பொருள்களைப் பயன்படுத்தும் வகையில், பெண்களுக்கு காகிதத்தால் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை செய்வதுடன், அதிகளவில் உற்பத்தி செய்து வியாபாரமும் செய்யலாம்.  இதுகுறித்து விவரங்களை 908032 07862 என்ற செல்லிடப்பேசி, 0462 2561915 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.