அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

"முத்திரை இல்லாத மின்னணு தராசுகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை'

முத்திரை இடப்படாத மின்னணு தராசுகள் மூலம் வியாபாரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

முத்திரை இடப்படாத மின்னணு தராசுகள் மூலம் வியாபாரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில் செய்யும் சிறு வியாபாரிகள் தமிழ்நாடு அரசின் மூலமாக முத்திரையிடப்பட்ட மின்னணு தராசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வியாபார நோக்கத்திற்காக முறையற்ற முத்திரையிடப்படாத தராசுகள் பயன்படுத்துவோரை கண்டறிய தொழிலாளர் நலத்துறை மாவட்ட முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
கீழப்பாவூர், சிவகாமிபுரம்,  தென்காசி பூ மார்க்கெட் பகுதிகளில் ஆய்வின்போது முத்திரையிடப்படாத 5 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வணிகர்களுக்கு  ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்று முறையற்ற தராசுகளை உபயோகிப்போர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.