குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

புத்தாக்கத் திருவிழாவில் அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்த வாய்ப்பு

திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் ஜனவரி 31ஆம் தேதி முதல் புத்தாக்கத் திருவிழா நடைபெற உள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் ஜனவரி 31ஆம் தேதி முதல் புத்தாக்கத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் அனைத்துத் தரப்பினரும் தங்களது அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.எம்.குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் புத்தாக்கத் திருவிழா ஜனவரி 31 ஆம்தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் வயது வித்தியாசமின்றி தங்களது புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தலாம். அறிவியல், தொழில்நுட்பம், இசை, உணவு, வேளாண்மை, கலை, கைவினை என எந்தவொரு பிரிவிலும் புதுமையான கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும். படைப்புகளைக் காட்சிப்படுத்துவோர் பதிவு செய்ய ஜனவரி 12ஆம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்த விவரங்களுக்கு திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தை அணுகலாம். 0462 2500256 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.