‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

வைகுண்ட ஏகாதசி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கானோர் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தனர்.
பாளையங்கோட்டையில் உள்ள அழகியமன்னார் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெற்றது. பக்தர்கள் துளசிமாலை, வெற்றிலையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். மாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வெளியேறி பெருமாளை தரிசித்தனர்.
திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள சன்னியாசி கிராமம் அலமேலுமங்கை சமேத வெங்கடேசபெருமாள் கோயிலில் சயன திருக்கோலத்தில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றன. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், ஆராதனையும் நடைபெற்றன.
திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல் பத்து, ராப்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. சிகர நிகழ்வாக செவ்வாய்க்கிழமை காலையில் வைகுண்ட ஏகாதசி சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. 
மேலும், கொக்கிரகுளத்தில் உள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ண பெருமாள் கோயில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள கரியமாணிக்கபெருமாள் கோயில், சி.என்.கிராமத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில், தச்சநல்லூரில் உள்ள வெங்கடாஜலபதி கோயில், மேலத்திருவேங்கடநாதபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோயில், திருநெல்வேலி கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெற்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.