சிஐடியூ தொழிற்சங்க கூட்டம்
சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டம் பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டம் பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.வின்சென்ட் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், துணைப் பொதுச்செயலர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். "ஊதிய ஒப்பந்தமும்-நமது முயற்சியும், முன்னேற்றமும்' என்ற தலைப்பில் சம்மேளன பொதுச் செயலர் கே.ஆறுமுகநயினார் பேசினார்.
கூட்டத்தில், "வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை நிர்வாகம் கைவிட வேண்டும்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கேரள அரசைப் போல ஆண்டுதோறும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்; கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி சி.மணி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...