பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் முதுகலை மற்றும் ஆய்வுக் கணினி அறிவியல் துறை சார்பில், "கணினி கணக்கீட்டு நுண்ணறிவு' எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வர் மு. முஹம்மது சாதிக் தலைமை வகித்தார்.
பன்னாட்டு நூல் குறியீட்டு எண், பன்னாட்டு ஆய்வு இதழ் குறியீட்டு எண் ஆகியவற்றுடன் கூடிய இதழ்கள் வெளியிடப்பட்டன. அரசு உதவிபெறாப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் ஏ. அப்துல் காதர் வாழ்த்திப் பேசினார்.
கேரள பல்கலைக்கழக கணினி அறிவியல் துறைப் பேராசிரியர் டி. முகம்மது நூருல் முபாரக், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ஏ. சுருளியாண்டி, தூய யோவான் கல்லூரிப் பேராசிரியை சஃபிஷ் மேரி ஆகியோர் பேசினர். பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
துறைத் தலைவர் எஸ். ஷாஜூன் நிஷா வரவேற்றார். பேராசிரியை தஸ்னீம் பாசிலா நன்றி கூறினார். ஏற்பாடுகளை துறைப் பேராசிரியர்கள் உமா தேவி, ரோஸ்லின் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.