டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

செவிலியர் உள்பட இருவரிடம் நகை பறிப்பு

பாளையங்கோட்டை பகுதியில் புதன்கிழமை நடந்து சென்ற செவிலியர் உள்பட இரு பெண்களிடம் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:37 am

DIN

பாளையங்கோட்டை பகுதியில் புதன்கிழமை நடந்து சென்ற செவிலியர் உள்பட இரு பெண்களிடம் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் விமலா (56) என்பவர்,  பெருமாள்புரம் தாமஸ் தெருவில் புதன்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், விமலா அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.
இதேபோல், என்.ஜி.ஓ. பி காலனியைச் சேர்ந்த குடிசைமாற்று வாரிய அதிகாரி மாடசாமியின் மனைவி பத்மா (46), தனது மகளுடன் அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு  வீடு திரும்பும்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள்,  பத்மா அணிந்திருந்த  10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினராம். மேலப்பாளையத்தில்  பெண்ணிடம் நகையைப் பறிக்க முயன்ற இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை,  பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பால்ராஜ் மற்றும் போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.