கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திசையன்விளையில் போலீஸை கண்டித்து மக்கள் சாலை மறியல்

திசையன்விளையில் கல்லூரி மாணவரை தாக்கியதாக, போலீஸாரை கண்டித்து, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:23 am

DIN

திசையன்விளையில் கல்லூரி மாணவரை தாக்கியதாக, போலீஸாரை கண்டித்து, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திசையன்விளை தனியார் கல்லூரியில் 3 ஆண்டு பொறியியல் படித்து வரும் மாணவர் ஜெகதீஸ். இவர், நண்பர்களான சக்திகுமார், கண்ணன் ஆகியோருடன்  இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார்,  அவர்களை தடுத்த நிறுத்த முயன்றனராம்.  அவர்கள் நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்களை போலீஸார் கம்பால் அடித்தனராம். இதில்,   நிலை தடுமாறி மூவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதையறிந்த  அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர்  சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வள்ளியூர் சரக துணைக் கண்காணிப்பாளர் கனகராஜ்  பேச்சு நடத்தி,  சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.