ரஜினி மக்கள் மன்றத்தின் மேலப்பாளையம் மண்டல ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டச் செயலர் செல்வக்குமார் தலைமை வகித்தார். கெளரவத் தலைவர் பானுசேகர், துணைச் செயலர் பாலகிருஷ்ணன், மகளிரணிச் செயலர் சியாமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலப்பாளையம் மண்டலச் செயலர் எஸ்.கே.அல்கபீர் சம்சுதீன் வரவேற்றார். மேலப்பாளையம் மண்டலத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் கீழ் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்ப்பது; அனைத்து வார்டுகளிலும் பூத் கமிட்டிகளை அமைப்பது; மக்கள் பிரச்னைகளுக்காக அதிகாரிகளிடம் மனு அளிப்பது; நிறைவேற்றப்படாத கோரிக்கைகளுக்காக மக்களைத் திரட்டி குரல் கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலப்பாளையம் மண்டல நிர்வாகிகள் அபுபக்கர்சித்திக், ஜெபஸ்டின்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரூப் பி பிரிவில் 3 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி..! எப்படி?

அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் படத்தின் அறிமுக படப்பிடிப்பு அப்டேட்!
ஜன்னல் ஓரத்தில்...

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
விடியோக்கள்

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK


