டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

களக்காடு தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

களக்காடு மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தலையணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Updated On :23 ஜூலை 2018, 8:05 am IST

களக்காடு மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தலையணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை  அதிகரித்துள்ளது.
களக்காடு மலைப் பகுதியில் கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் தலையணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள தடுப்பணையைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தலையணைக்கு குடும்பத்துடன் வாகனங்களில் வந்து குளித்துச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வாகன நிறுத்துமிடம் வனத்துறையினரால் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.  மேலும் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்லவும் ஓய்வு விடுதி கட்டப்பட்டு வருகிறது.
இருப்பினும்  உடை  மாற்றும் அறைகள் குறைந்தளவு இருப்பதால் பெண்கள் சிரமப்படுகின்றனர். கழிப்பிட வசதியின்மையால் திறந்தவெளியை  கழிப்பறையாக பயன்படுத்தும் அவலம் உள்ளது. சம்பந்தப்பட்ட வனத்துறையினர் தலையணையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, பெண்கள் உடை மாற்றும் அறை, கழிப்பிட வசதி, சுற்றுலாப் பயணிகளின் உடைமைகளைப் பாதுகாக்க பொருள்கள் பாதுகாப்பு அறை, உணவு விடுதி ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.