கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு, பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில், அஞ்சல் துறையில் புள்ளி அடிப்படையில்ஊதியம் நிர்ணயிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்; 31.12.2015 ஊதியத்தை 2.57 மடங்காக பெருக்கி ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்; 12, 24, 26 சேவை காலங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்; ஜி.டி.எஸ். பெண் ஊழியர்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்; 180 நாள்கள் வரை ஈட்டிய விடுப்பு சேமிக்க வாய்ப்பளிக்க வேண்டும்; பணிக்கொடையை ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்' என்பன உள்ளிட்ட கமலேஷ் சந்திரா குழுவின் பரிந்துரையை அஞ்சல் துறை நிர்வாகம் அமல்படுத்தக் கோரி கடந்த 12 நாள்களாக கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்ஒரு பகுதியாக பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் முன், கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.