மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மதுவிலக்கு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ஜூலை 22 ஆம் தேதி சிறப்பாக நடத்துவது என திருநெல்வேலியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகர் மாவட்டச்செயலர் கே.எம்.ஏ.நிஜாம் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலர் தி.மு.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் சிறப்புரையாற்றினார். உயர்நிலைக்குழு உறுப்பினர் தி.சதன்திருமலைக்குமார், மாவட்ட அவைத் தலைவர் ரைமன்ட், நிர்வாகிகள் ப.கல்லத்தியான், ராமகிருஷ்ணன், எடிசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கோவை, திருச்சி, சென்னை நகரங்களைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில் ஜூலை 22 ஆம் தேதி மதுவிலக்கு விழிப்புணர்வு மாணவர் மாரத்தான் போட்டியை சிறப்பாக நடத்துவது. போட்டிகளில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு கட்சியின் பொதுச்செயலர் வைகோவால் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்குவது. அரசியல் சார்பற்ற விழிப்புணர்வு போட்டியாக நடத்துவது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு!

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்






