காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சங்கரன்கோவில் அருகே நிலமோசடி: ஒருவர் கைது

சங்கரன்கோவில் அருகே நிலமோசடி செய்தது தொடர்பாக ஒருவரை திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

சங்கரன்கோவில் அருகே நிலமோசடி செய்தது தொடர்பாக ஒருவரை திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள வடநத்தம் பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய குடும்பத்தினர்  வடநத்தம் பட்டியில் கூட்டுறவு சங்கம் தொடங்கி, 1960-இல் வடநத்தம் பட்டியில் காலனி வீடு கட்டுவதற்காக ஒன்றரை ஏக்கர் நிலத்தை நன்கொடையாக பெற்றுள்ளனர். அதில் 10 பேருக்கு குடியிருப்பும், ஒரு கிணறும் அமைத்துள்ளனர். எஞ்சிய 90 சென்ட் நிலத்தை யாருக்கும் பங்கீடு செய்யாமல் சங்கத்தை நடத்தி வந்துள்ளனர். நிர்வாக கோளாறு காரணமாக 1986-ஆம் ஆண்டு சங்கத்தை கலைத்துவிட்டு, கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துடன் இணைத்துள்ளனர். 
பின்னர் அந்த 90 சென்ட் நிலம் 22 பேருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை எதிர்த்து வீரசிகாமணியைச் சேர்ந்த செல்லையா உள்ளிட்டோர் சங்கரன்கோவில் கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் அந்த நிலம் சங்கரன்கோவில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு பாத்தியப்பட்டது என தீர்ப்பளித்தது. 
இதையடுத்து செல்லையா, வீரசிகாமணியைச் சேர்ந்த செல்லத்துரை ஆகியோர் நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக போலி ஆவணம் தயார் செய்துள்ளனர். பின்னர் அந்த நிலம் சார் பதிவாளர் கலைச்செல்வத்தின் உதவியோடு ராஜலட்சுமி, செல்லத்துரை ஆகியோருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சங்கரன்கோவில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மைதீன் பட்டாணியின் உதவியோடு பட்டா மாற்றம் செய்து சங்கத்தையும், சங்க உறுப்பினர்களையும் ஏமாற்றியதாக சுரேஷ் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட தீவிர குற்றப்பிரிவு ஆய்வாளர் ரமா, செல்லத்துரையை கைது செய்தார். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக மேலும் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.