காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

புளியரை பகுதியில்  வெட்டுக் காயங்களுடன் ஒருவர் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம்,  புளியரை "எஸ்' வளைவுப் பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கிடந்தவரை போலீஸார் புதன்கிழமை இரவு மீட்டனர்.

Updated On :8 ஜூன் 2018, 1:28 am IST

திருநெல்வேலி மாவட்டம்,  புளியரை "எஸ்' வளைவுப் பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கிடந்தவரை போலீஸார் புதன்கிழமை இரவு மீட்டனர்.
தமிழக - கேரள எல்லைப் பகுதியான "எஸ்' வளைவுப் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் தலை, கைகளில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கிடப்பதாக புளியரை போலீஸுக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் போலீஸார் சென்று, அந்த நபரை மீட்டு, செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர், தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து புளியரை போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த நபர் சுரண்டையைச் சேர்ந்த முருகையா மகன் ராஜா என்ற அருணாசலம் என்பதும், அவர் மீது சுரண்டை, ஆலங்குளம் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும்,  அவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதாகவும் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.