ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

காப்பீடு ஊழியர் சங்க வெள்ளிவிழா: மாநாட்டு இலச்சினை வெளியீடு

பாளையங்கோட்டையில் காப்பீடு ஊழியர் சங்கத்தின் வெள்ளி விழா மாநாட்டின் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 1:55 am

பாளையங்கோட்டையில் காப்பீடு ஊழியர் சங்கத்தின் வெள்ளி விழா மாநாட்டின் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
 திருநெல்வேலி கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் வெள்ளிவிழா மாநாடு  ஆக. 3,4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, மாநாட்டின் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை காப்பீடு நிறுவன கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
  அமைப்பின் தலைவர் ஆர். மதுபால் தலைமை வகித்தார். அமைப்பின் முன்னாள் தலைவர் எஸ். ராமச்சந்திரன், இலச்சினை வெளியிட,  முன்னாள் பொதுச்செயலர் எஸ். சிவசங்கரசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
மாநாட்டு நிகழ்வுகளை அமைப்பின் முன்னாள் பொதுச்செயலர் டி. தேவபிரகாஷ், தொடங்கி வைத்துப் பேசினார். ஆயுள் காப்பீடு கழக முதுநிலை கோட்ட மேலாளர் கே. வசந்த்குமார் வாழ்த்திப் பேசினார். 
கோட்டப் பொதுச்செயலர் சி. முத்துக்குமாரசாமி வரவேற்றார். இணைச் செயலர் என். பொன்னையா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.