இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆசிரியர் தகுதித் தேர்வு பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி

பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சியளிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Updated On :21 மே 2018, 11:16 pm

பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சியளிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர் பட்டப்படிப்பு (ஆ.உக்), பட்டயப்படிப்பு (ஈ.ப.உக்) முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களின் தேசிய அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், திருநெல்வேலி, தொலைபேசி எண்: 0462-250157 என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வரும் 29ஆம் தேதிக்குள் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.