ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது என மதிமுக பொதுச்செயலர் வைகோ குறிப்பிட்டார்.
திருநெல்வேலியில், பைந்தமிழ் மன்றம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமராக நரேந்திர மோடி பதவிக்கு வந்த பிறகு ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் வகையில் பல்வேறு தவறான முடிவுகளை எடுத்து வருகிறார். கல்வியை மத்திய அரசின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றதால் நீட் தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளை எழுத வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இது சமூக நீதிக்கு எதிரான செயலாகும்.
இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பதவிகளுக்கான தேர்வுகள் இதுவரை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்தத் தேர்வு முறையில் புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.
தற்போது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தப்பட்டிருப்பது ஏழை- எளிய நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது. கர்நாடகத்தில் ஆட்சி மாறினாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கப்போவதில்லை. காவிரி மேலாண்மை வாரியம் என்பதை ஆணையம் என பெயர் மாற்றி அதிகாரமற்ற ஆணையமாக கொண்டு வருகின்றனர்.
காவிரி நடுமன்றத்தின் முக்கிய சரத்துக்களை மத்திய அரசு எடுத்து விட்டது. காவிரி பிரச்னையில் தமிழக மக்களின் குரல்வளையை நெரிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியை சந்திக்கும்.
காவிரி உரிமைக்காக போராட வேண்டிய தமிழக அரசு புகழ் மாலை சூட்டிக் கொண்டிருக்கிறது. காவிரி பிரச்னையைத் தீர்க்க ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்றார் வைகோ.
பேட்டியின்போது, கட்சியின் மாவட்டச் செயலர்கள் கே.எம்.ஏ. நிஜாம், தி.மு. ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. சதன்திருமலைக்குமார், எழுத்தாளர் செ. திவான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?

விதிமீறல்! விஜய் மீது வழக்குப் பதிவு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

