4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நெல்லையில் தகிக்கும் வெயில் தர்பூசணி விலை கடும் உயர்வு

திருநெல்வேலியில் மேகமூட்டங்களையும் தாண்டி சூரியனின் வெப்பம் தகித்ததால் பொதுமக்கள் திங்கள்கிழமை பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். உள்மாவட்ட வரத்து குறைந்ததால் தர்பூசணி பழங்களின் விலை

Updated On :21 மே 2018, 11:17 pm

திருநெல்வேலியில் மேகமூட்டங்களையும் தாண்டி சூரியனின் வெப்பம் தகித்ததால் பொதுமக்கள் திங்கள்கிழமை பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். உள்மாவட்ட வரத்து குறைந்ததால் தர்பூசணி பழங்களின் விலை கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த 8 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் ஒரு சில நாள்கள் கோடை மழை பெய்தாலும்கூட வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. திருநெல்வேலியில் திங்கள்கிழமை காலை முதல் மேகமூட்டம் காரணமாக நேரடியாக வெயில் பாதிப்பு இல்லாவிட்டாலும், கடுமையான வெப்பம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். பதநீர், இளநீர், தர்பூசணி, பழச்சாறு, கரும்புச்சாறு விற்பனை அதிகரித்தது.
சுரண்டை, தென்காசி, கடையம், கடையநல்லூர் பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு இளநீர் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இவை ரூ.15 முதல் ரூ.30 வரையும், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள செவ்விளநீர் ரூ.25 முதல் ரூ.40 வரையும் விற்கப்படுகின்றன. சீவலப்பேரி, செங்குளம், இளையாமுத்தூர், தருவை பகுதிகளில் இருந்து பதநீர் விற்பனையாளர்கள் திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் ஒரு சிறிய சொம்பு அளவு பதநீரை ரூ.15-க்கு விற்பனை செய்கிறார்கள்.
தர்பூசணி விலை உயர்வு: ராதாபுரம், சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த தர்பூசணி முற்றிலும் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில் இப்போது திண்டுக்கல், திண்டிவனம் பகுதிகளில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையான தர்பூசணி பழங்கள் திங்கள்கிழமை கிலோ ரூ.30-க்கு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.