சீவலப்பேரி அருகேயுள்ள பாலாமடையில் தாமிரவருணி ஆற்றில் மணல் திருடியதாக ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் திருட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாமிரவருணி, கருமேனியாறு, நம்பியாறு, சிற்றாறு கரையோர பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சீவலப்பேரி அருகேயுள்ள பாலாமடையில் போலீஸார் ரோந்து சென்றபோது அங்கு மூட்டைகளாக கட்டி மணலை ஒருவர் திருட முயன்றது தெரியவந்ததாம். விசாரணையில் அவர், பாலாமடையைச் சேர்ந்த கோமு (44) என்பது தெரியவந்ததாம். அவரை கைது செய்த போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை

வளா்ப்பு நாய் கடித்து பெண் காயம்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

