8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: ஆட்சியர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில்,  பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். 

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில்,  பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களுக்கும் ஆட்சியர் அறிவுரை வழங்கி பேசியதாவது: 
 மழை மற்றும் இயற்கை இன்னல்கள் ஏற்படும் காலங்களில் பாதிக்கப்படும்  மக்கள் தங்குவதற்கு 261 பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த் துறை,  உள்ளாட்சித் துறை, காவல் துறை,  தீயணைப்புத் துறை,  நெடுஞ்சாலைத் துறை, மின்வாரியத் துறை,  பொதுப்பணித் துறை,  மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
கோட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த சார் ஆட்சியர், கோட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சார் ஆட்சியர்,  கோட்டாட்சியர்கள் தலைமையில் மண்டல குழுக்கள், முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பேரிடர் நேரங்களில் ஆற்ற வேண்டிய பணிகளின் இன்றியமையாமை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 மழை மற்றும் இயற்கை இடர்ப்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது மாவட்ட அவசரகாலத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு  மக்கள் இலவச தொலைபேசி எண் 1077 -ஐ தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பழனி,   கோட்டாட்சியர் மைதிலி ,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.