கம்பன் இலக்கியச் சங்கத்தின் 1148 ஆவது தொடர் சொற்பொழிவு
கம்பன் இலக்கியச் சங்கத்தின் 1148 ஆவது தொடர் சொற்பொழிவு பாளை.யில் நடைபெற்றது.
கம்பன் இலக்கியச் சங்கத்தின் 1148 ஆவது தொடர் சொற்பொழிவு பாளை.யில் நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் கு.சடகோபன் தலைமை வகித்தார். பிரபா கிருட்டிணன் இறைவாழ்த்து பாடினார். தி.ராமன் வரவேற்றார். கம்பன் பாடல்கள் என்ற தலைப்பில் வரலாற்று ஆசிரியர் செ.திவானும், அன்னப்பறவை என்ற தலைப்பில் ஆசிரியர் முருகனும், நாவாய் வேட்டுவன் குகன் என்ற தலைப்பில் இணைச் செயலர் இரா.முருகனும், மகாபாரதத்தில் கிருட்டிணன் உரைகள் என்ற தலைப்பில் பொருளாளர் மு.அ.நசீரும் சொற்பொழிவாற்றினர். புலவர் வை.ராமசாமி, நெல்லையப்பன், சண்முகையா, ஆசிரியர் கோதைமாறன், பி.சுந்தரம், உமையொருபாகம், நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிலா இலக்கிய வட்டப் பொறுப்பாளர் ந.ராசகோபால் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





