ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

தியாகராஜநகரில் விநாயகர் தேரோட்டம்

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள அருள்மிகு விக்ன விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம்  நடைபெற்றது.

Published On :

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள அருள்மிகு விக்ன விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம்  நடைபெற்றது.
இத்திருக்  கோயிலில் 30 ஆவது ஆண்டு சதுர்த்தி விழா மற்றும் 26 ஆவது தேர்த்திருவிழா ஆகியவை கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாள்களில் தினமும் காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, ஆன்மிக சொற்பொழிவு, திருமுறை, தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
புதன்கிழமை காலையில் சிறப்பு தீபாராதனையும், வழிபாடுகளும் நடைபெற்றன. மாலையில் மலர் அலங்காரத்தில் விநாயகர் தேருக்கு எழுந்தருளினார். தியாகராஜநகர் 7 மற்றும் 8 ஆவது வடக்கு தெருக்களில் தேர் வலம் வந்தது. அப்போது, திருமுறை பாடியபடி பக்தர்கள் உடன் சென்றனர். வியாழக்கிழமை (செப். 13) விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலை 8 மணிக்கு கும்பபூஜை, பூர்ணாஹுதி, சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடக்கிறது.  பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.