கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Published On :

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு மானியத்துடன் நிகழாண்டு கார் பருவத்தில் செயல்படுத்தப்படுகிறது. இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குதல், விவசாயிகளின் உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாப்பது உள்ளிட்டவை இத்திட்டத்தின் நோக்கம்.
அறிவிக்க செய்த வருவாய் தொகுப்பு கிராமங்களில் அறிவிப்பு செய்துள்ள வாழை, வெங்காயம், மரவள்ளி பயிர்களை பயிரிடும் விவசாயிகள் (குத்தகை விவசாயிகள் உள்பட) இத்திட்டத்தில் சேர தகுதியானவர்கள். பயிர்க்கடன், விவசாய நகைக்கடன் பெறும் விவசாயிகள்இத்திட்டத்தில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளப்படுவர். பயிர்க் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின்பேரில் சேரலாம். இப்பருவத்தில் வெங்காயம், வாழை, மரவள்ளி பயிர்களுக்கு காப்பீட்டுக் கட்டணம் செலுத்துவதற்கான விவசாயிகளின் சேர்க்கை காலக்கெடு தேதி அக். 1வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடன்பெறும், பெறாத விவசாயிகளுக்கு ஒரேவித பயிர்க் காப்பீட்டுத் தொகை, பிரீமியத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு வாழைக்கு பிரீமியம் தொகை ரூ. 1,154-ம், வெங்காயத்துக்கு ரூ. 900-ம்,  மரவள்ளிக்கு ரூ. 300-ம் செலுத்த வேண்டும்.
இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும்போது, காப்பீட்டுக் கட்டணம் செலுத்திய விவசாயிகள் கட்டணமில்லாத 1800 2005 5522 என்ற தொலைபேசி எண்ணில், இழப்பு நிகழ்ந்த 48 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும். மகசூல் இழப்புக்கு வருவாய் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.