ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

பாளை.யில் 15இல் மின் தடை

பாளையங்கோட்டை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப். 15) மின் விநியோகம் இருக்காது.

Published On :

பாளையங்கோட்டை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப். 15) மின் விநியோகம் இருக்காது.
இது தொடர்பாக திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் (விநியோகம்) சு. முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதனால், கீழ்க்காணும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9முதல் மாலை 5மணிவரை மின்சாரம் இருக்காது. மின்சாரம் தடைபடும் பகுதிகள்:
வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், ரஹ்மத் நகர், நீதிமன்றப் பகுதி, சாந்தி நகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மார்க்கெட்,  திருச்செந்தூர் சாலை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகர், பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, திருவனந்தபுரம் சாலை, முருகன்குறிச்சி, மேலப்பாளையம், கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு, செய்துங்கநல்லூர்.

மேலக்கல்லூர், கரிசல்பட்டி  பகுதிகளில்...
மேலக்கல்லூர், கரிசல்பட்டி துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப். 15) மின் விநியோகம் இருக்காது.
இது தொடர்பாக கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் (விநியோகம்)  வீ. புலமாடன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9முதல் பிற்பகல் 1மணிவரை மின்விநியோகம் இருக்காது. மின்சாரம் தடைபடும் பகுதிகள்:
மேலக்கல்லூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கரன்திரடு, சுற்றுவட்டாரப் பகுதி; கரிசல்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர் குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.